கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது மேல் நங்கவரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது: 45). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது தம்பி சரத்குமார் (வயது: 42). இவரும் விவசாயியாக இருந்து வந்துள்ளார். மேல் நங்கவரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிழா கொண்டாட்டத்தின்போது அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட தகராறில், விடியற்காலையில் சரத்குமார் தன் கையில் வைத்திருந்த சூரி கத்தியில் சக்திவேலின் மார்பில் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
.jpg)
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சக்திவேலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

இது குறித்து, தகவல் அறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலைசெய்த சரத்குமாரை இன்று கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்தியபோது எற்பட்ட தகராறில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb