ஸ்ரீநகர்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தார். ஸ்ரீநகரில் இன்று நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
காஷ்மீரில் சில நாட்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில் பிரதமர் மோடி,காஷ்மீர் வந்துள்ளார். எனவே. சிறப்பு பாதுகாப்பு குழு, மார்கோஸ் கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் முழுவதும் அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, காஷ்மீருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.