டெல்லி தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. டெல்லி அரசு அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை […]
