கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச் சாராயம் அருந்திய நிலையில், அவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.
Source Link
