மத்தியப் பிரதேசத்தின் மந்த்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அழுக்கு வேஷ்டி சட்டையுடன் ஒரு முதியவர் தரையில் உருண்டு அழுது புலம்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி அதில் வருபவர் காட்லி கிராமத்தைச் சேர்ந்த சாந்திலால் படிதார் என்ற விவசாயி. தன்னுடைய நிலம் பிரச்னைக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பதில் கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி, நேராக ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து இவ்வாறு தரையில் விழுந்து அழுது புரண்டிருக்கிறார்.
मंदसौर के बुजुर्ग किसान हैं, कहते हैं कहीं सुनवाई नहीं हो रही आरोप है कि ज़मीन फर्जी दस्तावेजों के जरिये कुछ लोगों ने हड़प ली है … कलेक्टर दफ्तर से यूं निराश होकर लौटे … pic.twitter.com/bpAHfHp2NH
— Anurag Dwary (@Anurag_Dwary) July 17, 2024
மேலும், இது தொடர்பாக அந்த விவசாயி, தான் சொல்வதை யாருமே காதுகொடுத்து கேட்பதில்லை என்றும், தன்னுடைய நிலத்தை மாஃபியா கும்பல் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் அபகரித்துவிட்டார்கள் என்றும் தன்னுடைய பிரச்னையை வெளிப்படுத்தினார். பின்னர், அங்கிருந்த போலீஸார் உட்பட பிற அதிகாரிகள் அந்த விவசாய நிறுத்தி அவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்தனர்.