தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்கள், வட தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரியில் காலை நேரத்தில் … Read more

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நாளை தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு … Read more

அமெரிக்க முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் நியமனம்

அமெரிக்காவின் முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் குஞ்சன் கேதியா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னணி வங்கியான யு.எஸ்.பான்கார்ப் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ள ஆண்டி செசர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக குஞ்சன் கேதியா (54) நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார். இந்த வங்கியின் சிஇஓ பொறுப்பு வகிக்கப் போகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. … Read more

பிளாஸ்டிக் தடை குறித்து பொய்யான அறிக்கை! நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களை விளாசிய உயர்நீதிமன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை கொடுத்த  நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும்  சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த விசாரணையின்போது காணொலி மூலம் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில்  மக்கள் மட்டுமின்றி காடுகள், மலைப்பிரதேசங்களில் வசிக்கும் கால்நடைகள், விலங்குகளும்,  அங்கு சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கு பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

உத்தர பிரதேசம்: காணாமல் போன 8-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு – போலீஸ் விசாரணை

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். ஆடுகளை தேடி வீட்டை விட்டு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதி சுற்று முழு விவரம்

கோலாலம்பூர், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதி சுற்று கோலாலம்பூரில் நாளை தொடங்க உள்ளது. அரையிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா, இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதி சுற்று முழு விவரம் பின்வருமாறு:- முதல் அரையிறுதி: தென் … Read more

உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷியா டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் இன்று ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் … Read more

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இடஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் இந்த தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக் கொள்ள … Read more

மகாத்மா காந்தியின் 77-வது நினைவு நாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை

மகாத்மா காந்தியின் 77-வது நினைவு நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர். நாட்டின் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர்லால் … Read more

திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி நியூஸ் 18 ஒளிபரப்பிய செய்திக்கு தடை…

“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதுகுறித்து, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் (NBDSA)-யிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் அனைத்து தளங்களிலிருந்தும் அதனை நீக்க NBDSA உத்தரவிட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த NBDSA நிகழ்ச்சி தயாரிப்பாளரின் நோக்கம் சனாதன தர்மத்தை பற்றியதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக … Read more