தாவூத் இப்ராஹிமை கொல்வதை லட்சியமாக கொண்ட சப்னா தீதி இறந்தது எப்படி?

புதுடெல்லி: மும்பையில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி. இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது. மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை ஏர்போர்ட்டில் வைத்து சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார் காரணம் என்பதை தேடி அலைந்தார். … Read more

மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த நவம்பர் 25 ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரின் சம்மதமும் அவருடைய குடும்பத்தாரின் ஒப்புதலும் இல்லாமலேயே கருத்தடை சாதனமான காப்பர் டி-யைப் பொருத்தியுள்ளனர். … Read more

கூட்டணிக்கான லாலுவின் அழைப்பை நிராகரித்தார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: பிஹார் மாநிலத்தில் முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மெகா கூட்டணியில் அங்கம் வகித்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் பேசுகையில் “கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், முந்தைய கசப்பு உணர்வுகளை மறந்து நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இணைய வேண்டும்” … Read more

ஜார்ஜ் சோரஸுக்கு அமெரி்க்காவின் உயரிய விருது: கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 19 பேருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை வழங்கினார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸி, நடிகர்கள் மைக்கேல் ஜே பாக்ஸ் … Read more

தமிழகத்தில் அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலுக்கு நேற்று வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பழமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள சிற்பங்கள் பாதுகாக்கப்படவில்லை. வழிபாடுகூட நடத்தப்படாமல் உள்ளன. கோயில்கள் மூலம் அறநிலையத் துறை ஆண்டுக்கு ரூ.656 கோடி வரி வசூலிக்கிறது. மத்திய தொல்லியல் துறை மூலம் நாடு … Read more

விவசாயிகள் போராட்டத்தை முடிக்க மத்திய அரசு உதவியை நாடும் பஞ்சாப் அரசு

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு கோரிக்கை வைத்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரத … Read more

‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ – ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

டெல் அவிவ்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல். அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி … Read more

அய்யன் திருவள்ளுவர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டுக்கான   அய்யன் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமு அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள், வரும் 15ந்தேதி அன்று திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, … Read more

Relationship: பிளே பாய்ஸ் உருவான கதையும் பெண்களின் எமோஷனல் திருப்தியும்..!

பிளே பாய்ஸ் … ஆண்கள் பற்றி அடிக்கடி காதுல விழுற இந்த கேரக்டருக்கு என்ன அர்த்தம்..? இந்த கேரக்டர் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்துல எப்படி நடந்துப்பாங்க..? இவங்க நல்லவங்களா, கெட்டவங்களா..? விளக்கமா சொல்லப்போறாங்க டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் ஷாலினி. ”பிளே பாய்ஸ் ’நல்லவங்களா, கெட்டவங்களா’ என்று அலசி ஆராய்வதற்கு முன்னால், எந்த மாதிரியான ஆண்களை பிளே பாய்ஸ் என்று சொல்கிறோம் என்று தெரிந்துகொள்வோம். ஓர் ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காதலில் இருப்பார். … Read more

நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை கோலாகலம்

உதகை: “எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி மொற் பர்த் பண்டிகையை கொண்டாடினர் தோடரின பழங்குடிகள். நீலகிரியில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர், கோத்தர் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் மூவாயிரம் தோடர்கள் … Read more