விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை … Read more

வீடியோவில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த என்ஆர்ஐ மீது வழக்கு

நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சீவுட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நவி மும்பையில் உள்ள என்ஆர்ஐ மீது போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு ஆகிப் படிவாலா என்பவரை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். கணவர், அவரது குடும்பத்தினருடன் நாங்கள் பிரிட்டனுக்கு சென்றோம். பிரிட்டனில் கணவர் வேலை செய்கிறார். அங்கு சென்ற பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை அதிகமாக சித்ரவதை செய்தனர். என்னுடைய … Read more

தனது அடுத்த படம் குறித்து அறிவித்த இயக்குநர் ஷங்கர்

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். வருகிற 10-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஷங்கர்,கலந்துக் கொண்டார் அப்போது இயக்குநர் ஷங்கர் “’எனது … Read more

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு – பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை! கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து முடிந்திருக்கிறது. 3-ம் தேதி காலை ஏழு மணிக்கு காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். அப்போது இல்லத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் காத்திருந்து, பின் அமைச்சர் தரப்பில் மதியம் ஒரு மணிக்கு மேல் … Read more

அனுபவமற்ற தொழிலாளர்கள், அளவுக்கு அதிகமான வெடிபொருள் – விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஆலை உரிமையாளர்கள், மேலாளர், போர்மேன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரை கைது செய்தனர். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 80 அறைகள் உள்ளன. இதில் 40 … Read more

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த அதிகாரி மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மூத்த அதிகாரி மீது சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது. இதை எதிர்த்து இரு அதிகாரிகளும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தெலங்கானா அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிபிஐ … Read more

7 ஆம் தேதி உள்ளூர் மக்கள் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு

திருப்பதி வரும் 7 ஆம் தேதி அன்று திருப்பதி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான சாமி தரிசன அனுமதி 7-ந்தேதி நடக்கிறது. அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன டோக்கன்கள் திருப்பதி மகதி கலை அரங்கத்தில் உள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் … Read more

Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத சர்ச்சை!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரி, மாணவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 13-ம் தேதி நடந்த தேர்வில் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஏற்கெனவே கசிந்துவிட்டதாக கூறி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். … Read more

பொங்கலுக்காக 9 நாள் விடுப்பு கிடைக்க வாய்ப்பு: ஜன.17 விடுமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன. 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜன. 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு … Read more

பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

புதுடெல்லி: “வயதான காலத்​தில் பிள்​ளைகள்கவனிக்​கா​விட்​டால், பெற்​றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம்” என்று உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்​துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்​டும். அந்த சொத்து​களுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்​டும் என்று கோரி ம.பி. உயர் நீதி​மன்​றத்​தில் அந்த பெண் வழக்கு தொடுத்​தார். அதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், … Read more