படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை

புதுடெல்லி, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரெயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்வதையும், அப்போது ரெயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சலனமின்றி … Read more

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" – ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார்ப் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த … Read more

சென்னை மியூசிக் அகாடமியின் 90 ஆண்டு கலை சேவை உலக அளவில் ஒரு சாதனை: கொரியா தூதரக தலைவர் புகழாரம்

சென்னை: மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் ஒப்பற்ற ஒரு சாதனை என்று சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம் தெரி வித்துள்ளார். மியூசிக் அகாடமியின் 18-வது ஆண்டு நாட்டிய விழா நேற்று சென்னை மயிலாப்பூர் டிடிகே அரங்கில் தொங்கியது. சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன்கிம், விழாவை தொடங்கி வைத்து, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் … Read more

இலவச சக்கர நாற்காலிக்கு டெல்லியில் ரூ.10,000 வசூலித்த போர்ட்டர் உரிமம் ரத்து

டெல்லி ரயில் நிலையத்தின் இலவச சக்கர நாற்காலியை பயன்படுத்த , வெளிநாட்டு வாழ் இந்திய பெண்-ஐ ஏமாற்றி ரூ.10,000 வசூலித்த சுமை தூக்கும் தொழிலாளியின் உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன் ஆக்ரா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் 21ம் தேதி வந்தார். அங்கு சுமை தூக்கும் தொழிலாளி உதவியுடன் தன் தந்தையை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி சேவையை … Read more

டொனால்டு ட்ரம்ப் ஓட்டல் மீது தீவிரவாத தாக்குதல்?

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்தது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இது 64 … Read more

சென்னை மாரத்தான்: மெட்ரோ ரயில்கள் நாளை அதிகாலை 3 மணிமுதல் இயக்கம்

சென்னை: மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள் அதிகாலை 3 மணிமுதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை (5-ம் தேதி) நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3 மணிமுதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் ‘க்யூஆர்’ குறியீடு பதியப்பட்ட … Read more

திரையரங்கு நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்

திரையரங்கு நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று ரெகுலர் ஜாமீன் வழங்கியது. ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சிக்கு படத்தின் கதாநாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். இவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் … Read more

புத்தாண்டில் அமெரிக்காவை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்: யார் இந்த சம்சுதீன் ஜாபர்?

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிக்அப் டிரக் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர மேலும், இரண்டு இடங்களில் இதேபோன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட் சம்சுதீன் ஜாபர் (42) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் என்பதை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. இதுகுறித்து எஃப்பிஐ கூறியுள்ளதாவது: … Read more

7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?

கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது. வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் … Read more

கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதம் மாற்றமா? – உத்தர பிரதேச முதல்வருக்கு மவுலானா கடிதம்

மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய இருப்பதாக … Read more