உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா

பெய்ஜிங், அதிகரித்து வரும் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியில், சீனா பள்ளிகளில் உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ள நிலையில் … Read more

கோவையில் ஐ.டி நிறுவனம் திடீர் மூடல்: 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க தவாக வலியுறுத்தல்

சென்னை: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “போக்கஸ் எஜூமேட்டிக் பிரைவேட் என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், கோவை ஆர்.எஸ்.புரம் – தடாகம் சாலையில் செயல்பட்டு வந்தது. … Read more

உத்தராகண்டின் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட முடிவு

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இச்சட்டத்தை எதிர்த்து ஜமாத்-எ-உலாமா ஹிந்த் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராகிறது. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (UCC) கொண்டுவருவது பாஜகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் … Read more

வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர் முக ஸ்டாலின் – அன்புமணி பரபரப்பு பேச்சு!

வன்னிய மக்களுக்கு வரலாற்றில் இல்லாத துரோகத்தை செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று சேலத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு.

உச்சகட்ட கோபத்தில் ரோஹித் சர்மா! பிசிசிஐயில் புகார்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரோகித் சர்மாவிற்கு சமீபத்தில் எந்த ஒரு தொடரும் சிறப்பாக அமையவில்லை. இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது. இது ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது எதிர்காலம் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டு முதல் டெஸ்டிலேயே அணியை … Read more

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன. கோக், ஃபாண்டா மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர்பானங்களில் அதிக அளவு ரசாயன குளோரேட் இருந்ததால், ஐரோப்பிய சந்தையில் இருந்து கோகோ கோலா யூரோபாசிஃபிக் பார்ட்னர்ஸ் திரும்பப் பெற்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் அதிகப்படியான அளவு ரசாயனம் கொண்ட கேன்கள் மற்றும் பாட்டில்கள் நவம்பர் முதல் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று கோகோ … Read more

தெலுங்கானா: சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் பலி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாலை தடுப்புச்சுவரில் பைக் ஒன்று மோதியதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணிக்கு நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவர்கள் 3 பேர் ஓட்டி சென்ற … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; பஞ்சாப் – ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9வது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி 4வது இடத்திலும் உள்ளன. … Read more

சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். அதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தொலைபேசி மூலம் இந்திய பிரதமர் மோடியிடம் உரையாடினார். இந்த … Read more