மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுக்க கமிட்டி அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு

சென்னை: கடலில் பாலம் அமைக்​கும் திட்டம் உள்ளிட்ட தங்களது வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் திட்​டங்களை எதிர்த்து குரல் கொடுத்து பாது​காக்​கும் வகையில், ஒரு கமிட்​டியை அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு செய்​துள்ளன. சென்னை நொச்​சிக்​குப்பம் முதல் நீலாங்கரை வரை கடலில் 15 கி.மீட்டர் தூரத்​துக்கு பாலம் அமைக்​கப்​படும் என தமிழக அரசு அறிவித்​துள்ளது. அரசின் இந்த அறிவிப்​பால் இப்பகு​தி​யில் வசிக்​கும் மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடி தொழில் பாதிக்​கும். இதனால், மீனவர்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்​கும். இதேபோல், மெரினா மற்றும் எலியட்ஸ் … Read more

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

பெங்களூரு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவர் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா ஆவார். அவர் அந்தப் புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த … Read more

சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: கெடுபிடி காட்டும் அமெரிக்கா; பணிந்த கொலம்பியா!

கொலம்பியா: சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் என்று கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அமெரிக்கா நாடுகடத்தியவர்கள் கொண்ட விமானத்துக்கு அனுமதி அளிப்பதென கொலம்பியா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அந்நாட்டு … Read more

ஆசியாவிலேயே பெரிய 160 அடி முருகன் சிலை… தமிழ்நாட்டில் எங்கு வருகிறது தெரியுமா?

Marudhamalai Murugan Temple: கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே பெரிய சிலையாக 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: சென்னையில் 5 இடம் உள்பட 20 இடங்களில் என்ஐஏ ரெய்டு…

சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டுள்ள சென்னையில் 5 இடம் உள்பட மயிலாடுதுறை சீர் காழி பகுதிகளில் 15 இடங்களில் என மொத்தம் 20 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள  திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை … Read more

KTM 390 Adventure – 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பற்றி விற்பனைக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

இந்தியாவில் ஜனவரி 30ல் வரவுள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை ரூ.3.30 லட்சத்தில் துவங்கலாம்.

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓ.பி.எஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஜகபர் அலி குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியவர்கள் … Read more

தொழில்முனைவோருக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றுகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் 12 கிலோவாட் மின்சுமைக்குக் குறைவாகப் … Read more

வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்: 14 திருத்தங்கள் மட்டும் செய்ய முடிவு

புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் 14 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வக்பு (திருத்த) மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. … Read more

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அறிய நியூயார்க், நியூ ஜெர்சி குருத்வாராக்களில் சோதனை: சீக்கியர்கள் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் உள்ள குருத்வாராக்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி பதவி யேற்றார். அதன்பின், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்கள், விசா முடிந்தும் தங்கியிருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் … Read more