காயத்தில் இருந்து இன்னும் மீளாத பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jasprit Bumrah Injury Update: அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கான எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்தது. இத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆனால் ஓரளவுக்கு இந்திய அணி போராட காரணம் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். ஆனால் இத்தொடரின் முடிவில் அவர் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான … Read more

டிராய் எச்சரிக்கைக்கு பணிந்தது ஜியோ… உடனே கொண்டுவந்த புதிய ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம்

Jio Recharge Plans Voice Only: சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் உரிய விதத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பாக 2ஜி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வசதிகள் மட்டும் கொண்ட திட்டங்களை நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதாவது, தற்போது அனைத்து ரீசார்ஜ் … Read more

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் பணிக்கு ரூ.18.6 கோடி! மத்தியஅரசு ஒதுக்கீடு!

திருச்சி: திருச்சி  விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும்  பணிக்கு ரூ.18.6 கோடி செய்து  மத்தியஅரசு அறிவித்து உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு  பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து, திருச்சியில் இருந்து  மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில்  புதிய விமான நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய விமான ஓடுபாதையில் தான் … Read more

Indonesia: “எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" – இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது நகைச்சுவையாகப் பேச்சைத் தொடங்கிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, “சில வாரங்களுக்கு முன்பு எனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எனக்கு இந்திய டி.என்.ஏ இருப்பது தெரியவந்தது. நான் இந்திய இசையைக் … Read more

சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? – அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களுக்கு எதிரான திமுக அரசின் இந்த … Read more

டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரை படை சூழ சாரட் வாக னத்தில் விழாவுக்கு வந்த குடியரசுத் … Read more

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை

Government job | கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பு

வெளிநாட்டு நிதி உதவிகளை நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்கா அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தியுள்ளது. ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ், அதன் வெளியுறவுக் கொள்கை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிற நாடுகளுக்கு அமெரிக்க நிதி உதவியை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களுக்கு ஏதாவது பிரதிபலன் கிடைக்கும் வரை, வெளிநாடுகளுக்கு இனி கண்மூடித்தனமாக நிதி உதவி வழங்க மாட்டேன் என்று ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். … Read more

Gold Price : 'சின்ன இறக்கம்' – தங்கம் விலை இன்று குறைந்துள்ளது – எவ்வளவு தெரியுமா?!

குறைவு… இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.7,540. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் விலை (22K) ரூ.60,320. நேற்றை விட, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.104-க்கு விற்பனை ஆகி வருகிறது. Source link