“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயல்முறையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 104 இந்தியர்கள் அமெரிக்க இராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பின்னரே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் குற்றம் சாட்டினர். […]
