கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250 பேருந்துகளை MSRTC இயங்கிவருகிறது, அதேபோல் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 120 பேருந்துகளை KSRTC இயக்கி வருகிறது. இருமாநில எல்லையை ஒட்டிய பகுதியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே மூன்று நாட்களுக்கு முன் மொழி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அது இரண்டு மாநில பிரச்சனையாக உருவெடுத்தது. […]
