பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அமன் அரோரா, சுகாதார அமைச்சர் பல்பீர் சிங், போக்குவரத்து அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், தொழில்துறை அமைச்சர் தரன்பிரீத் சிங் ஆகியோர் இக் குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.