போபால் நச்சுக்கழிவை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

போபால் விஷ வாயு விபத்து நடந்த இடத்திலிருந்து நச்சுக்கழிவுகளை அழிப்பது தொடர்பான மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை பேரிடராக கருதப்படுகிறது. இந்நிலையில், யூனியன் கார்பைடு … Read more

Kingston: `பேச்சுலருக்குப் அப்புறம் 3 படங்கள் நடிச்சேன்; ஆனா ரிலீஸாகலை…' – திவ்யபாரதி

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. ஜி.வி.பிரகாஷ் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள். அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு … Read more

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து, … Read more

ஒற்றுமையின் ‘மகா யாகம்’ நிறைவடைந்தது – மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: “மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. மகா கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா நேற்றுடன் (பிப். 26) நிறைவடைந்தது. இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. பிரயாக்ராஜில் 45 … Read more

VTV : `இந்தக் கதையை பெரிய ஹீரோவுக்காக 6 நாளில் எழுதி முடித்தேன்' – கௌதம் மேனன் பகிர்வு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. ரஜினியின் `சந்திரமுகி’ சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா’ படமும் படைத்தது. ரி-ரிலீஸில் சென்னையின் பிரபல மல்டிபிளக்ஸ் ஒன்றில் 750 நாள்களைக் கடந்தும் ஓடியது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது… போலீசாரின் தடையை மீறி திருக்கழுக்குன்றம் மெயின்ரோட்டில் மறியல்…

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில் கலந்துகொண்டு திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை பிப். 25ம் தேதி இரவு அதேபகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த நபர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதாக … Read more

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் 63-வது ஆண்டாக முத்தம்மாள்(92) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து, சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியைச் சேர்ந்த முத்தம்மாள் (92) என்ற … Read more

‘மம்தா தான் எனது தலைவர்’ – கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு சலசலப்புக்கு அபிஷேக் பானர்ஜி மறுப்பு

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு என்பதை மறுத்துள்ள அக்கட்சிப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “எனது தலைவர் மம்தா பானர்ஜி தான்” என்றும் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் பேசிய திரிணமூல் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி, “நான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன். மம்தா பானர்ஜிதான் என்னுடைய தலைவர். நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர போகிறேன் என்று கூறுபவர்கள் வதந்தியை பரப்புகிறார்கள். … Read more

Shruti Hassan: ஷ்ருதி ஹாசனின் ஹாலிவுட் படம்; மும்பை திரைப்பட விழாவில் இன்று திரையிடல்!

`தி ஐ (The Eye)’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஸ்ருதி ஹாசன். இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது. இன்று இத்திரைப்படம் மும்பை வென்ச் (WENCH) திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் டிரைலர் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் டயானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதற்கு முன்பு இத்திரைப்படம் லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஸ்ருதி ஹாசன் … Read more

45 நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய்… உ.பி. பொருளாதாரத்தை பூஸ்ட் செய்துள்ள மகாகும்பமேளா

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பாவங்களை போக்க 65.21 கோடி பேர் வந்திருந்தனர். இந்தியா மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 14 மேம்பாலங்கள், 6 சுரங்கப்பாலங்கள், சாலை அகலப்பணி, புதிய சாலைகள் என … Read more