அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிக்க "கோல்டு கார்டு" திட்டம் அறிமுகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு தங்க அட்டை எனும் ” கோல்டு கார்டு” திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த ” கோல்டு கார்டு” விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.43 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது: தற்போதுள்ள “இபி-5” புலம்பெயர் முதலீட்டாளர் விசா திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கும் அல்லது முதலீடு செய்யும் வெளிநாட்டு … Read more

1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில் 1.81 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது, 2021ம் ஆண்டு 57,366 தெருநாய்கள் மட்டுமே இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள தெருநாய்களில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 1.28 லட்சம் நாய்களுக்கு இன்னும் கருத்தடை … Read more

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், … Read more

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டம், சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதியம் 1 மணியளவில் பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இவர்களின் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் 2 சுற்றுகள் வரை சுட்டு தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் ராணுவ வீரர்கள் காயமின்றி தப்பினர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்றது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் … Read more

இன்று மகாசிவராத்திரி :  மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன., மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “இந்த புனித நாளில் நாட்டு … Read more

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து – கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு

கரூர்: குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கோவை சுகுணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர், மனைவி கலையரசி(45), மகள் அகல்யா(25), மகன் அருண்(22) ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு(24) காரை ஓட்டியுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை புறவழிச் … Read more

மாநிலங்களவை தேர்தலில் கேஜ்ரிவால் போட்டி?

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி கண்டது. அந்த கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 48 இடங்களில் வெற்றி கண்ட பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி … Read more

சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம்  கான் ஜாமீனில் விடுதலை

லக்னோ சொத்துக் குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்துல்லா அசம் கான்  சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான அசம் கானின் மகன் மற்றும் சுவார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார் அப்துல்லா அசம் கான் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பான வழக்கும் ஒன்றாகும் இந்த வழக்கில், அப்துல்லா அசம் கான் கடந்த … Read more

VIT: போபாலில் கோலாகலமாக நடைபெற்ற விஐடி அத்வித்யா 2025

விஐடி போபாலில் ‘விஐடி அத்வித்யா 2025’ என்ற வருடாந்திர கலாசார திருவிழாவில் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்ற சாதனையாளர்களுக்கு எம்பி கவுரவ் விருதுகளை, விஐடி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினர். விஐடி போபாலில் ‘விஐடி அத்வித்யா 2025’ என்ற வருடாந்திர கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவை அர்ஜூனா விருது பெற்ற … Read more