கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250 பேருந்துகளை MSRTC இயங்கிவருகிறது, அதேபோல் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 120 பேருந்துகளை KSRTC இயக்கி வருகிறது. இருமாநில எல்லையை ஒட்டிய பகுதியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே மூன்று நாட்களுக்கு முன் மொழி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அது இரண்டு மாநில பிரச்சனையாக உருவெடுத்தது. … Read more

உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள திக்பால்கஞ்ச் பாதாய் பகுதியில் இருந்து 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பைக் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சராய் மணிஹார் கிராமத்திற்கு அருகே உள்ள பீகார்-பக்சர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில் இரட்டையர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்… 'இம்பேக்ட் பீல்டர் விருது' வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

ஜெர்மனி பொதுத்தேர்தல்: ஆளுங்கட்சி படுதோல்வி

பெர்லின், ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தோல்வியடைந்திருப்பதை முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சியால் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. ஜெர்மனியில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினத்தந்தி Related Tags : … Read more

டி.வி விவாதத்தில் வெறுப்புப் பேச்சு: கேரள பாஜக தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது!

கேரள ஜனபக்‌ஷம் கட்சியின் தலைவராக இருந்தவர் பூஞ்ஞாறு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விவாதத்தை கிளப்புவார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி இந்து மகா சம்மேளனத்தில் பேசிய பி.சி.ஜார்ஜ், முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது நடவடிக்கைக்கு ஆளானார். இதற்கிடையே பி.சி.ஜார்ஜ் தனது மகனுடன் பா.ஜ.க-வில் இணைந்தார். கடந்த மாதம் 5-ம் தேதி ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பி.சி.ஜார்ஜ் முஸ்லிம்களுக்கு எதிராக சில … Read more

“மகா கும்பமேளாவுக்கு நிரந்தர கட்டமைப்பு அவசியம்!” – யோகியை வெளுத்து வாங்கிய அகிலேஷ் யோசனை

புதுடெல்லி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நிரந்தரமான அடிப்படைக் கட்டமைப்புகள் அவசியம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். மேலும், உ.பி. பாஜக அரசையும் அவரை கடுமையாக விமர்சித்தார். உ.பி.யின் எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (பிப்.24) தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை எம்.பி.யும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: “மகா கும்பமேளா என்பது துறவிகள், மத தலைவர்கள் மற்றும் … Read more

காசி தமிழ்ச் சங்கமம் 3.0: செம்மொழி தமிழாய்வு நிறுவன அரங்கை பார்வையிட்ட இல.கணேசன்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாராணாசியின் காசி தமிழ்ச் சங்கமம் 3.0-வில் (கேடிஎஸ் 3.0) இடம்பெற்றிருந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நாகாலந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கேடிஎஸ் 3.0 நிகழ்வு வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ படித்துறையில் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 14-ல் துவங்கிய இந்நிகழ்வில், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் … Read more

சாம்பியன்ஸ் டிராபி வீரர்களுக்கு ஆபத்தா? வெளிநாட்டினரை கடத்தும் பயங்கரவாதிகளின் பிளான் அம்பலம்!

ICC Champions Trophy 2025 Pakistan: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப். 19ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி துபாயில் அதன் அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது. அதாவது, இந்திய அணியுடன் விளையாட அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் இருந்து துபாய் வர வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்குக் கூட துபாய் … Read more

Samantha: `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' -ரசிகரின் கேள்விக்கு, சமந்தா சொன்ன பதில்..!

நடிகை சமந்தா எப்போதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருபவர். தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரியில் `Ask me everything’ என்ற தலைப்பில் ரசிகர்களின் கேள்விகள் பலவற்றிக்கு பதிலளித்து வருகிறார் சமந்தா. அப்படி ஒருவர் `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, “ `உள்ளொழுக்கு’ திரைப்படத்தில் நடிகை பார்வதி திருவோத்து, `சூக்ஷமதர்ஷினி’ திரைப்படத்தில் நஸ்ரியா, `அமரன்’ திரைப்படத்தில் `சாய் பல்லவி’, `ஜிக்ரா’ திரைப்படத்தில் ஆலியா … Read more

ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகிலுள்ள பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையானது குர்சாயில் உள்ள பமர்னார், கிகர் மோர், ஜப்தான் காலி, ஹர்னி, கஸ்பலாரி மற்றும் பாப்லியாஸ் வனப்பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினத்தந்தி Related Tags : … Read more