Mahindra Scorpio-N Carbon Edition – 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ-N கார்பன் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற ஸ்கார்பியோ-என் மாடலின் விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் கார்பன் எடிசன் ₹ 19,19,400 முதல் ₹ 24,89,100 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷனில் தொடர்ந்து வழங்கப்படுகின்ற ஸ்கார்பியோ-என் மாடலில் Z8 and Z8L வேரியண்டின் அடிப்படையில் மேனுவல் , ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடன் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது. கார்பன் எடிசனில் கருமை … Read more

Cassowary : `உலகின் ஆபத்தான பறவை இனம்' – ஒரே மிதியில் மனிதர்களை வீழ்த்திவிடுமா?!

உலகில் மனிதர்கள் பார்த்து அச்சப்படும் பறவைகள் மிகச் சிலதான். அதில் நிச்சயமாக கஸ்ஸோவரி (Cassowary) பறவையும் இடம்பெறும். உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை எனப் பெயர் பெற்றுள்ள இந்த பறவை, ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது. அழகும் ஆபத்தும் ஒன்றாகவே இருக்கும் எனச் சொல்லப்படுவதற்கு ஏற்றபடி இந்த பறவை அழகானதாக இருக்கிறது. அதன் பிரகாசமான நீல நிற முகம், ஹெல்மெட் அணிந்ததைப் போன்ற கொண்டை, கூரான நகங்கள் இதனை … Read more

தருமபுரி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி ஊராட்சி சின்னமுருக்கம்பட்டியில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிபொருட்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் வழக்கம்போல குடோனில் செண்பகம், திருமலர், மஞ்சு உள்ளிட்ட நான்கு பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் … Read more

இந்தியாவில் 7 திட்டங்களுக்கு 750 மில்லியன் டாலர் அமெரிக்க நிதி

இந்தியாவில் 7 திட்டங்களுக்கு 750 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான நிதியுதவியை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம் (யுஎஸ்ஏஐடி) வழங்கி வருவதாக மத்திய நிதியமைச்சகம் அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்கான அறிக்கையில் நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தற்போது 750 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏழு தி்ட்டங்கள் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் இதற்காக 97 மில்லியன் டாலரை … Read more

“காசாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயார்!” – நெதன்யாகு

டெல் அவில்: காசாவில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு மாற்றாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை … Read more

உங்களுக்கு இதே வேலையா…! சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை… அதிரடி உத்தரவு

Savukku Shankar Case: தன் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்த செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Vijay: "சச்சின் படத்துல அப்பா மகேந்திரன் முரண்பட்ட அந்த ஒரு விஷயம்" – ஜான் மகேந்திரன் பேட்டி

‘சச்சின்’ இளமை துள்ளல், காமெடி கலாட்டா, கலர்ஃபுல் காதல் என விஜய் அடித்து ஆடிய வின்னிங் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லி’ யைப்போல, ரீ-ரிலீஸ் ஆகப்போவதால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், ‘சச்சின்’ படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரனிடம் பேசினேன்… “சச்சின் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், மரண மாஸ் வெயிட்டிங்குன்னு ஒவ்வொருத்தரும் பயங்கர எதிர்பார்ப்போடு கமென்ட் பன்றாங்க. எல்லா புகழும் நிச்சயமா விஜய்க்குத்தான் சேரும். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ன்னு தொடர்ச்சியா … Read more

பாஜகவின் விஜேந்தர் குப்தா டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்வு

டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.  ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இன்று, டெல்லி சட்டசபைக்கு புதிதாக … Read more

துரைமுருகனின் சர்ப்ரைஸ் விசிட்… `ஷாக்' காந்தி? – என்ன நடக்கிறது ராணிப்பேட்டை திமுக-வில்?

கைத்தறித்துறை அமைச்சரும் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளருமான ஆர்.காந்திக்கும், மூத்த அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய ஆதரவாளரும் ராணிப்பேட்டை மாவட்டப் பொருளாளருமான ஏ.வி.சாரதிக்கும் இடையே வெளிப்படையான மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, துணை முதலமைச்சர் உதயநிதியின் குட் புக்கிலும் இடம் பிடித்துவிட்டாராம் ஏ.வி.சாரதி. அமைப்பு ரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் எனப் பிரிக்கப்பட்டு வரும் வேளையில், ராணிப்பேட்டை மாவட்டமும் பிரிக்கப்பட்டால் சாரதிக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி பேசப்பட்டு வருகிறது. சாரதியை வாழ்த்திய துரைமுருகன், … Read more

ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் இயற்கை வனச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருகின்றனர். இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி … Read more