ஐதராபாத்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. . இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன.
.இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் , ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும்போது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.