சென்னை,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து மோதும் இந்த போட்டி தமிழகத்தின் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மெரினாவில் விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
Related Tags :