இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வள துறை அமைச்சர் தகவல்

இந்தியா-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். அப்போது, மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையிலானோர், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், … Read more

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முற்போக்கான மாநிலமாக தமிழகம் கருதப்பட்டது. ஆனால் திமுக அரசின் தவறான கொள்கைகளால் தமிழகம் தடுமாறி குழப்பத்துக்கு ஆளாகி நிற்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இதற்காவே அவர் தேசிய கல்வி … Read more

சிஎஸ்கே போட்டியை பார்க்க வருபவர்கள் உண்மையில் ரசிகர்களா? – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கேள்வி!

ஐபிஎல்லின் 18வது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலும், அந்த வெற்றியையும் கஷ்டப்பட்டே பெற்றது சென்னை அணி.  சென்னை அணியின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்திலேயே இம்முறை சென்னை அணி திணறி வருவது ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்திருக்கும் அதே … Read more

கட்டியதற்கு ரூ.8 கோடி… சீரமைக்க ரூ.18 கோடி – காஞ்சி தடுப்பணை ‘8 ஆண்டு’ சர்ச்சை

கஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப் பணையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ரூ.8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை சீரமைக்க 8 ஆண்டுகளுக்குள் 2 மடங்குக்கும் அதிகமாக நிதி ஒதுக்கும் அளவுக்கு தடுப்பணையில் என்ன நடந்துள்ளது என்பது விவசாயிகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாற்று பகுதிகளில் அதிக அளவில் தடுப்பணை களை கட்ட வேண்டும் என்று … Read more

13 காவல்நிலைய எல்லைகள் தவிர மணிப்பூர் முழுவதும் AFSPA மீண்டும் அமல்: மத்திய அரசு

இம்பாலா: மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல் நிலைய எல்லைகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல்நிலைய எல்லைப் பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் திராப், சங்லாங் மற்றும் லாங்டிங் ஆகிய மாவட்டங்களுக்கும், மாநிலத்தின் மூன்று காவல் நிலைய எல்லைப் … Read more

சென்னை 'சுமார்' கிங்ஸ்… தோனியாலும் முடியவில்லை… சிஎஸ்கே படுதோல்வி என்ன காரணம்?

IPL 2025, RR vs CSK: ஐபிஎல் 2025 தொடரின் 11வது லீக் போட்டி கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் தேர்வு செய்தார்.  ராஜஸ்தான் அணி அதன் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு பதில் விஜய் சங்கர் மற்றும் … Read more

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' – ஆ.ராசா சொல்வதென்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் திமுக மாணவர் அணி கூட்டம் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு … Read more

கோடை வெயில் எதிரொலி: 1 முதல் 5-ம் வகுப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு தேதிகள் மாற்றம்!

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு … Read more