ஆபரேஷன் பிரம்மா: மியான்மருக்கு 52 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையின் கீழ் 52 டன் நிவாரணப் பொருட்களை கடற்படை கப்பல்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது குறித்த மத்திய அரசின் தகவல்: மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தைத் தொடர்ந்து, மியான்மருக்கு இந்திய அரசு உதவி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. மனிதாபிமான … Read more

முதல் வெற்றிக்கு… மும்பை அணி பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதுதான்!

IPL 2025, MI vs KKR: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலையில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விசாகப்பட்டினத்திலும், இரவில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கௌகாத்தியிலும் மோதுகின்றன. MI vs KKR: வான்கடேவில் வாய்ப்பு யாருக்கு…? இவை ஒருபுறம் இருக்க, தொடர்ந்து இரண்டு தோல்விகளை அடைந்திருக்கும் 5 முறை … Read more

சுனாமி எச்சரிக்கை! டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… தொடரும் சோகம்!

Tonga Earthquake: தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் – நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் போலவே இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் உண்மையான தாய்ப்பாலில் இருந்துதான் இந்த ஐஸ்கிரீமை வழங்குகிறதா என்று கேட்டால் இல்லை, தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் … Read more

நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு: வீரர்களை உற்சாகப்படுத்திய நடிகர்கள் விக்ரம், துஷாரா

நத்தம்: நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பிடித்து பரிசுகளை பெற்றனர். நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் பங்கேற்று மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஆன்லைன் மூலம் 742 காளைகள், 300 மாடுபிடிவீரர்கள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவபரிசோதனைக்கு பிறகு களம் இறங்கப்பட்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் … Read more

‘என்டிஏ கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்’ – நிதிஷ் குமார்

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்த தவறு நடக்காது என பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை உறுதி செய்தார் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிஹார் மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநிலத்தில் பல … Read more

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம்.. வெளியான அட்டவணை!

கிரிக்கெட்டை பொறுத்தவரை தற்போது இந்திய அணிதான் டாப் அணியாக உள்ளது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை கூறலாம். இந்த இரு அணிகள் மோதும் போட்டிகள் என்றால் சுவாரஸ்யம் அதிகமாகதான் இருக்கும். இச்சுழலில் இரு அணிகளும் சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதிக்கொண்டன. அந்த தொடரில் இந்தியா மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அத்தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.  இந்த நிலையில், இரு அணிகளும் மீண்டும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடரில் மோத இருக்கின்றன. இது தொடர்பான ஆட்டவணை … Read more

Jyothika: `Time flies!' – த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் ‘டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். Suriya – Jyothika Lunch Party இங்கு இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கு ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை … Read more

RR vs CSK : 'அந்த ரெண்டு பேரும் டீம்ல இல்ல!' – ருத்துராஜ் கொடுத்த அப்டேட்

‘டாஸ் முடிவு’ சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அசாமின் கவுஹாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?’ தோல்விக்கான அந்த 3 காரணங்கள் ‘அந்த 2 வீரர்கள்!’ டாஸை வென்றுவிட்டு ருத்துராஜ் பேசுகையில், ‘இது ஒரு நல்ல பிட்சாகத் தெரிகிறது. அதனால் சேஸ் செய்கிறோம். கடந்த போட்டிக்கும் இந்தப் போட்டிக்கும் குறுகிய இடைவெளிதான் இருந்தது. … Read more

‘குற்றச்செயல்களில் மதுரை முதன்மை மாவட்டம்’ – ஆட்சியர் சங்கீதா வேதனை 

மதுரை: குற்றச் செயல்களில் மதுரை முதன்மை மாவட்டமாக திகழ்வது வேதனை அளிக்கிறது என மேலூர் அருகே நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா ஆதங்கம் தெரிவித்தார். மதுரை மேலூர் பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாவட்ட காவல்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் கிளையூரில் நடந்தது. சமூக நீதி மனித உரிமை பிரிவு காவல் பிரிவு எஸ்ஐ கிருஷ்ணபாண்டி வரவேற்றார். காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா … Read more