டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4×4 MT விற்பனைக்கு வெளியானது

சந்தையில் கிடைக்கின்ற பிரபலமான பிரீமியம் எஸ்யூவி டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மாடலில் கூடுதலாக 4×4 MT மாடல் ரூ.46.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள லெஜெண்டர்  மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆல் வீல் டிரைவ் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளதால் டார்க் 80Nm வரை குறைவாக வெளிப்படுத்துகின்றது. Fortuner Legender 4×2 AT – ₹ 44,11,000 Fortuner Legender 4×4 MT – ₹ 46,36,000 … Read more

Dragon: `கனவு நிறைவேறிய நாள்..' – ரஜினி பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசியிருக்கிறது இப்படம். கல்வி பற்றியும் … Read more

''நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது'': கமல்ஹாசன் 

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், ”மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகாண்ட், வட கிழக்கு போன்ற மாநிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்த … Read more

உ.பி-யில் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மார்ச் 13க்குள் அகற்ற முதல்வர் யோகி உத்தரவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆளும் உ.பியின் முதல்வரான துறவி யோகி, உ.பி மாநில சாலைகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார். இதில் சாலை விபத்துக்களுக்கு காரணமான பல பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து அவர் இன்று தனது நிர்வாகத்தில் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் முக்கியமாக மது விற்பனையில் … Read more

‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ – வரி விதிப்பு விவகாரத்தில் ட்ரம்புக்கு சீனா பதிலடி

பெய்ஜிங்: “அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது” என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரம் இன்று(புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த … Read more

பெண்கள் மாதம் ரூ.2,500 பெறலாம்… தகுதிகள் என்ன? விண்ணபிப்பது எப்படி?

Mahila Sammiridhi Yojana: மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 கொடுக்கும் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் இணைய தகுதிகள் என்ன வேண்டும், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

வசூல் மழையில் டிராகன்! பிரதீப்பிடம் தோற்ற தனுஷ்.. NEEK-ன் நிலைமை என்ன?

Dragon vs NEEK: டிராகன் படத்துடன் திரையரங்கில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வி உள்ளது. 

Champions Trophy 2nd Semi Final: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.. வெல்லப்போவது யார்? போட்டி எங்கே, எப்போது?

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. நேற்று (மார்ச் 04) முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.  டாஸ் வென்று … Read more

தொகுதி சீரமைப்பு : முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்

சென்னை தொகுதி சீரமைப்பை எதிர்த்து நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் “ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு … Read more

261 கிமீ ரேஞ்ச்., அல்ட்ராவைலெட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

அல்ட்ராவைலெட் நிறுவனம் ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் புதிய டெசராக்ட் ஸ்கூட்டரை 3.5Kwh, 5Kwh மற்றும் 6 Kwh என மூன்று வித பேட்டரி ஆப்ஷனில் ரூ.1.20 லட்சம் அறிமுக சலுகை விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் முன்பதிவு துவங்ககப்பட்டு டெலிவரி 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம், ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மின்சார ஷாக்வேவ் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. Ultraviolette Tesseract அதிநவீன … Read more