தங்கக்கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்துள்ளார். கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு ரன்யா ராவ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான ‛வாகா’ திரைப்படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார். இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த … Read more

சாம்பியன்ஸ் டிராபி: டிராவிஸ் ஹெட்டை விரைவில் அவுட்டாக்க இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

சென்னை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறார். குறிப்பாக கடந்த டெஸ்ட் … Read more

பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில்: பள்ளிகள் மூடல்

மணிலா, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தினத்தந்தி Related Tags : பிலிப்பைன்ஸ்  பள்ளிகள் மூடல்  Philippines  Heat wave 

`மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த ஒரே தலைவர் கலைஞர்தான்' – உதயநிதி ஸ்டாலின்

வக்ஃபு வாரியம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதில், “உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகள். நான் ரமலான் வாழ்த்து சொல்வது பலருக்குக் கோபம் வரும். இன்னும் நூறு முறைகூட மீண்டும் மீண்டும் ரமலான் வாழ்த்தைச் சொல்வோம். இன்றைக்கு சிறுபான்மையினர் சொந்த வீடுபோல் இருக்கிற மாநிலம் ‘தமிழ்நாடு’தான் என்று தைரியமாகச் சொல்லலாம். ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ இஸ்லாமியர்களின் அன்பைப் பெற்று செயலாற்றி வருகிறது. உதயநிதி … Read more

மொழிக் கொள்கை: பழனிவேல் தியாகராஜன் நேர்காணலை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது தொடர்பாக, கரண் தாப்பருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த வீடியோ பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதில், “இருமொழிக் கொள்கை மூலம்தான் நாங்கள் தமிழகம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. உத்தரப் பிரதேசம், பிஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்? எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழி தெரியும்? Our cabinet colleague @ptrmadurai … Read more

ஒடிசாவில் நோயை குணப்படுத்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு பலமுறை சூடு

ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த இக்குழந்தை, சூடு வைக்கப்பட்ட பிறகு அதன் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து உமர்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்தக் குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் … Read more

IND vs AUS: சுப்மன் கில் பிடித்த கேட்ச்சால் பரபரப்பு.. எச்சரித்த நடுவர்! வீடியோ வைரல்!

Umpire Warning To Shubman Gill: சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார். இன்று (மார்ச் 4,செவ்வாய்க்கிழமை) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.  வருண் சக்ரவர்த்தி எடுத்த விக்கெட் இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் கேட்சை சுப்மன் கில் பிடித்தார். ஹெட் அவுட் … Read more

Nayanthara : `லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்; நயன்தாரா என்று அழையுங்கள்!' – அறிக்கை வெளியிட்ட நயன்தாரா

நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருபவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் பலரும் `லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைப்பார்கள். சீனியர் நடிகையாகவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்படுவதாலும், அதிகப்படியான ஃபீமேல் சென்ட்ரிக் திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுப்பதனாலும் ரசிகர்கள் இவரை இப்பெயரைக் கொண்டு அழைப்பார்கள். இனி அந்தப் பெயரைக் கொண்டு தன்னை அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். Nayanthara அந்த அறிக்கையில் அவர், “என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த … Read more

பெருமாளுக்கு கோயில் கட்ட இலவச நிலம் வேண்டும்… திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆந்திரா கடிதம்

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த முடிவை டி.டி.டி. எடுத்துள்ளது. இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மாநிலத்தின் தலைநகரில் இலவச நிலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்து வருவதை காரணம் காட்டி நாட்டின் … Read more

கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா

மும்பை, மராட்டிய மாநில உணவுத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தனஞ்செய் முண்டே. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, மராட்டியத்தின் பீட் மாவட்டம் மசாஜோ கிராம பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வீட்டில் இருந்து கடத்தப்பட்டு கொடூரமான முறையில் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மந்திரி தனஞ்செய் முண்டேவின் உதவியாளர் வால்மிக் கரட் போலீசில் சரணடைந்தார். மசாஜோ கிராமத்தில் மும்பையை சேர்ந்த காற்றாலை மின் … Read more