முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்.. பி.சி.சி.ஐ. இரங்கல்

மும்பை, மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த செயல்பாடுகளில் ஒன்று 1972-73 ரஞ்சி சீசனின் இறுதிப்போட்டியில் 13 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி மும்பை … Read more

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் … Read more

Virat Kohli: '335 கேட்ச்கள்' – ரிக்கி பான்டிங், ராகுல் ட்ராவிட்டை கடந்து விராட் கோலி சாதனை!

கடந்த சில மாதங்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகள் படைத்துவருகிறார். சமீபத்தில் 14,000 சர்வதேச ஒருநாள் போட்டி ரன்களை சேர்த்து, இந்த சாதனையைப் படைத்த 3 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவானார். அதேபோல, இன்றும் ஒரு சாதனைப் பட்டியலில் தனது பெயரை சேர்த்துள்ளார். Team India சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 26 வயதான வீரர் விராட் கோலி 2 கேட்ச்களைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் … Read more

ஜமைக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞரின் உடல் 78 நாட்களுப் பின் சொந்த ஊருக்கு வந்தது – மக்கள் அஞ்சலி

திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷின் (31) உடல் 78 நாட்களுக்குப் பின்பு சொந்த ஊருக்கு இன்று கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு புளியந்தோப்பு நடுத்தெரு நாகராஜனின் மகன் விக்னேஷ். ஜமைக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் புகுந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் செல்லும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் … Read more

எஸ்டிபிஐ தலைவர் எம்.கே.ஃபைஸி கைது: டெல்லியில் அமலாக்கத் துறை திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறை டெல்லியில் கைது செய்துள்ளது. இந்த கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஃபைஸி கைது: கடந்த 2006 நவ.22-ல் உருவான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாக துவக்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ. இதன் தேசியத் தலைவரான ஃபைஸி மீது பணமோசடி புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் … Read more

நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் 3a புரோ மாடல் போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் … Read more

ரவீந்திர ஜடேஜா மீது ஆஸ்திரேலியா பரபரப்பு புகார்.. அம்பயர் கொடுத்த வார்னிங்

Ravindra Jadeja : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் கள நடுவர் ரவீந்திர ஜடேஜாவை பந்துவீச வரும்போது தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாய் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 264 ரன்கள் குவித்த நிலையில் போட்டியின் நடுவே திடீரென ஜடேஜாவை பந்துவீச அனுமதிக்க முடியாது அம்பயர் கூறியது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அம்பயரின் அறிவுறுத்தலை ஏற்ற … Read more

கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலி

உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார். டெல்லி மண்டவாளி பகுதியைச் சேர்ந்தவர் பரத் பாஹ்டி இவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மனிசாரில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கிரேட்டர் நொய்டா, கிரிதர்பூர் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது காரில் சென்றுள்ளார். திருமணம் நடைபெறும் இடம் அதிக பரிச்சயம் இல்லாத இடம் என்பதால் கூகுள் … Read more

தான்சானியாவில் 20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகளுடன் வாழும் அதிசய மனிதர்

தான்சானியா, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பவர் , 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார். அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் … Read more

UP: சட்டமன்றத்தில் பான் மசாலா எச்சில்… MLA-வைக் கண்டித்த சபாநாயகர்!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் சதீஷ் மகானா, சபையின் உள் வளாகத்தில் தரை விரிப்பு மீது பான் மசாலா துப்பியதற்காக சட்டமன்ற உறுப்பினரைக் கடிந்துகொண்டுள்ளார். அத்துடன், அனைவரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தரைவிரிப்பில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ யார் என்பதை சபாநாயகர் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட உறுப்பினர் தன்னை நேரில் வந்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அப்படி வந்து சந்திக்காவிட்டால் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். சபாநாயகர் சதீஷ் … Read more