`அவர் சொல்வது முற்றிலும் தவறு' – பெப்சியை தாண்டி புதிய அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

தனுஷ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு இடையேயான கால்ஷிட் விவகாரம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணிக்கு பலக் கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டார் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி. இதனை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து பதில் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

Dhanush - Five Star Creations - R.K.Selvamani
Dhanush – Five Star Creations – R.K.Selvamani

இன்றைய தினம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெப்சி-யை தாண்டி தமிழ்நாடு தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்கிட முடிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. இந்த புதிய அமைப்பில் அதிக நபர்களுக்கு வேலைக் கிடைக்கும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

இதனை தொடர்ந்து செல்வமணி தொடர்பாக பேசிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள், “செல்வமணியை அடியாளாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

அது முற்றிலும் தவறானது. தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு படம் செய்துக் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்டோம். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் இந்த இடத்தில் செல்வமணியும் அதை ஒப்புக் கொண்டார். பணமாக நாங்கள் கேட்கவில்லை.

Dhanush
Dhanush

கால்ஷிட் பெற்றுதரதான் கேட்டோம். நாங்கள் அப்படி சொன்னதற்கான ஆதரத்தை ஆர்.கே.செல்மணியை காட்டச் சொல்லுங்கள். எங்களுக்கு மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை.

அவர் கற்பனையில் அதைச் சொல்கிறார். இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக அப்படிச் சொல்கிறார்.” எனக் கூறியிருக்கிறார்கள்.

புதிய அமைப்பை தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கள் எடுத்திருக்கும் முடிவு குறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில் 72 திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் 5 படங்கள் தவிர மற்ற அனைத்தும் தோல்வி படங்களே.

TFAPA Notice
TFAPA Notice

பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து, அவர்களுக்கு எவரின் ஆதரவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காக்க, நமது இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்த கடுமையான சூழ்நிலையில் அவசியம்.

சினிமாத்துறை தற்போது உள்ள மோசமான சூழ்நிலையில், பெரிய முதலீட்டு படங்கள் மட்டுமல்லாது, சிறு முதலீட்டுப் படங்களும் பயனடையும் வகையில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, FEFSI-யுடன் இணைந்து, ஒரு JAC (Joint Action Committee) குழுவை அமைத்து அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் சினிமாவில் தற்போது தேவைப்படும் மாற்றங்களை கொண்டுவருவது மிகவும் அவசியம் என்று கருதுகிறோம்.

TFAPA Notice
TFAPA Notice

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான முக்கிய வழிகளை நமது இரு சங்கங்களும் உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில், இன்னொமொரு தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பது எந்த வகையிலும், தமிழ் சினிமாவுக்கு பயன் தராது.

அதற்கான தேவையும் இல்லை. அது நமது செயல்பாடுகளை திசை திருப்பி விடும். நம் இரு சங்கங்களும் FEFSI-யுடன் இணைந்து, தேவைப்படும் மாற்றங்களை கொண்டுவருவதே, விரைவான மாற்றங்களுக்கு வழி என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.