சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் வெறும் 150 ரன்கள் அடிப்பதற்கு 20 வது ஓவர் வரை எடுத்துக் கொண்டனர். முதல் போட்டியில் டார்கெட் சிறியது என்பதால் வெற்றியை பதிவு செய்திருந்தனர், ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் 180க்கு மேல் டார்கெட் இருந்ததால் சென்னை அணியால் அதனை அடிக்க முடியவில்லை. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிங்க: பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல்லில் இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
குறிப்பாக பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்கள் அடித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மற்ற ஒன்பது அணிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னை அணி இதில் கடைசி இடத்தில் உள்ளது. குறிப்பாக கேப்டன் ருதுராஜ் மூன்றாவது இடத்தில் களமிறங்குவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இன்றைய போட்டியிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. கடந்த மூன்று போட்டியில் எளிதாக அடிக்க வேண்டிய இலக்கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்காமல் விட்டதால் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
சென்னை அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்
சென்னை அணி எப்போதும் ஒவ்வொரு வீரரையும் பேக்கப் செய்து அவரை தொடர் முழுக்க விளையாட வைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த யுக்தியை மாற்றியாக வேண்டும். கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின் சென்னை பீச்சிலேயே விக்கெட் எடுக்க சிரமப்படுகிறார். அதே போல ரன்களையும் வாரி வழங்குகிறார். சென்னை அணியில் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் விளையாடுகின்றனர். இந்த மூவரில் இரண்டு பேர் விளையாடினாலே சென்னைக்கு பெரும் உதவியாக இருக்கும், அந்த மூன்றாவது இடத்தில் ஒரு ஆல் ரவுண்டரை விளையாட வைக்கலாம்.
அதேபோல கேப்டன் ருதுராஜ் மீண்டும் ஓப்பனியில் களமிறங்கியாக வேண்டும். ரச்சின் ரவீந்திரா அல்லது டேவான் கான்வே இருவரில் ஒருவரை மட்டும் விளையாட வைத்து ஒரு ஃபாரின் ஆல்ரவுண்டரை இறக்கலாம். மேலும் பவுலிங்கில் கலில் அகமது மட்டுமே பவர் பிளெயில் நன்றாக பந்து வீசுகிறார், அவருக்கு உதவியாக அனுசுல் கம்போஜை அணியில் கட்டாயம் எடுத்தாக வேண்டும். பவர் பிளேயில் விக்கெடுகள் விழுந்தாலும் பரவலை என்று குறைந்தது 50 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த மாற்றங்களை செய்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரவிருக்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை பெறலாம்.
மேலும் படிங்க: சேப்பாக் வந்த தோனியின் பெற்றோர்.. ஓய்வு பெறுகிறாரா?