18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இத்தொடரின் 19வது லீக் ஆட்டம் நாளை (ஏப்ரல் 06) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டிக்கு ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளில் இருந்து வருகிறது. அதேசமயம் குஜராத் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து அதன் பின் இரண்டு போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று இப்போட்டிக்கு வருகிறது. ஒருபக்கம் தோல்விகளில் இருந்து மீளும் முனைப்பில் ஹைதராபாத்தும் மறுமுனையில் வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியும் களம் இறங்குகின்றனர்.
இரு அணிகளின் பலம் & பலவீணம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இந்த அணியை பொறுத்தவரையில், இந்த அணியின் பேட்டிங் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த போட்டிகளில் இவர்களது பேட்டிங் சோபிக்கவில்லை. அவர்கள் அதிரடியான மனப்பான்மையே இதற்கு காரணமாகும். மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ஆடாமல் எப்போது ஒருரே பாணியில் அதிரடியான பாணியில் ஆடுகின்றனர். இதனாலேயே கடந்த போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் கம்மின்ஸ், ஷமி, சம்பா ஆகியோர் அணிக்கு பலமாக இருக்கின்றனர். இவர்கள் பேட்டிங்கில் பொறுப்புடன் ஆடினாலே இவர்களால் வெற்றியை பெற முடியும்.
குஜராத் டைட்டன்ஸ்: குஜராத் அணியை பொறுத்தவரையில் அந்த அணி இரண்டிலுமே பலமாக பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. பேட்டிங்கில் சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் பந்து வீச்சில் சிராஜ் , அர்சத் கான், சாய் கிஷோர் ஆகியோர் பலமாக உள்ளனர். இந்த அணியில் பலவீணமாக ஏதும் தெரியவில்லை. வீரர்கள் அவர்களது கடமைகளை சரியாக செய்தாலே அணிக்கு வெற்றியானது நிச்சயம்.
போட்டியின் நேரம் மற்றும் மைதானம்
மைதானம்: ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்.
நேரம்: இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டியானது தொடங்கும்.
ஸ்டீரிமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விகீ), நிதிஷ் ரெட்டி, கமிந்து மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா (இம்பேக்ட்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட்/சிமர்ஜீத் சிங், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விகீ), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (இம்பேக்ட்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, கிளென் பிலிப்ஸ்/அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
மேலும் படிங்க: பஞ்சாப் அணிக்கு முதல் அடி.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
மேலும் படிங்க: ஐபிஎல்லில் எம். எஸ். தோனியின் டாப் 5 இன்னிங்ஸ்!