சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்… வெளியான டாப் சீக்ரெட்..!

IPL 2025, CSK : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை  எட்டிக்கொண்டிருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விகள் அந்த அணி பிளே ஆஃப் செல்லுமா? என்ற கேள்வியை எழ வைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய தோல்விகளை பார்த்து கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனென்றால், நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இப்போதே சிக்கல் எழத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகளில் தோல்வியை தழுவாமல் எஞ்சியிருக்கும் 9 போட்டிகளில் 6ல் வெற்றியை பெற்றாக வேண்டும். 

இதனை செய்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய கம்பேக்காக இருக்கும். அதேநேரத்தில் இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரே ஒருமுறை கூட கோப்பைகளை வெல்லாத அணிகள் எதிர்கொண்ட விமர்சனங்களை விட 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஒரு தொடரில் சில தோல்விகளை பெற்றதற்காக அதிகமான மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும் சிஎஸ்கே தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும்போது டாப் சிக்ரெட் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பந்துவீச்சைக் காட்டிலும் பேட்டிங்கே காரணம் ஆகும். இந்த ஐபிஎல் 2025 தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. எம்எஸ் தோனி பின்வரிசையில் இறங்கி அடித்த ரன்களையே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் எடுத்திருக்கின்றனர். அதாவது 5 போட்டிகளிலும் சேர்த்து டாப் 4 பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் குறைந்தபட்சம் 250 முதல் 400 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோர் 150 ரன்களுக்குள்ளாகவே எடுத்திருக்கின்றனர். இதுவே சிஎஸ்கே அணியின் தோல்விக்கான மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டுகிறது. அதேபோல் 180 ரன்களுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறைகூட சேஸிங் செய்யவில்லை. இந்த இலக்கை சேஸ் செய்த 11 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கிறது. 

அதனால் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் பேசும்போதுகூட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு பேட்டிங் மட்டுமே காரணம். இனி சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணிகளை 180 ரன்களுக்குள்ளாக கட்டுப்படுத்திக் கொடுத்தால் மட்டுமே சேஸ் செய்வார்கள். இல்லையென்றால் அவர்களால் முடியாது என காட்டமாக விமர்சித்துள்ளார். தோனி பேட்டிங்கை விமர்சித்தவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடியதைப் பார்த்து, சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சிஎஸ்கே இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.