Pahalgam Attack: “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா.

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “அன்பிற்குரியவர்களின் இழப்பை எவ்வளவு பெரிய தொகையாலும் ஈடுசெய்ய முடியாது தான். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் ஆதரவை காட்டும் விதமாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புகைப்படம்
காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புகைப்படம்

இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

இறந்தவர்களின் உடல்களை அவரவர் இல்லங்களுக்கு மரியாதைக்குரிய வகையில் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

படுகாயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துயர்களில் பங்கு கொள்கிறோம். இந்த இருண்ட நேரத்தில் உங்களுக்கு துணை நிற்கிறோம்” என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.