2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன..! | Automobile Tamilan

2025 ஆம் ஆண்டிற்கான புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூபாய் 1.50 லட்சம் முதல் ரூபாய் 1.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


2025 RE Hunter 350

  • ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350-ல் முந்தைய பின்புற சஸ்பென்ஷன் முறையானது மாற்றப்பட்டு தற்பொழுது பிராகிரஸ்யூ சஸ்பென்ஷன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • அடுத்தபடியாக, கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மில்லி மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது
  • கூடுதலாக இருக்கையில் வழங்கப்பட்டுள்ள ஃபோம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இருக்கையின் சொகுசு தன்மை சிறப்பாக இருக்கும்.
  • மேலும் டாப் மற்றும் மிட் வேரியண்டில் தற்பொழுது எல்இடி ஹெட்லைட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
  • மற்றபடி இந்த மாடலில் கூடுதலாக நான்கு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

ஹண்டர் 350 பைக் மாடல்  J-Series எஞ்சின் பெற்று அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன் 27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு கூடுதலாக சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

  • Retro Factory Black ₹1,49,900
  • Mid Dapper Grey, Rio white – ₹ 1,76,750
  • Top Rebel Blue, Tokyo Black, London red ₹1,81,750

(Ex-Showroom Tamil Nadu)

2025 Royal Enfield hunter 350 leaked new


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.