நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் அரை சதம் விளாசி இருக்கிறார். கோலி மொத்தமாக 443 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138 ஆக உள்ளது.
இச்சூழலில் ஒவ்வொரு வாரமும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் டாப் 10 வீரர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்து வருகிறார். ஆனால் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.அதேபோல் விராட் கோலி தனது உச்சக்கட்ட கிரிக்கெட் செயல்பாட்டை தாண்டி வந்துவிட்டதாக அவர் குறை கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு விராட் கோலியின் சகோதரர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சஞ்சய் மஞ்சுரேக்கர் மொத்தமாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் 64 என்கின்ற அளவில்தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். ஆனால் அவர் என்னவோ 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது போல மற்றவர்களை குறை கூறி வருகிறார் என விகாஸ் கூறி உள்ளார்.
விகாஸ் கோலியின் இந்த பதிலை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனத்திற்கு விராட் கோலியும் முன்னதாக பதிலடி கொடுத்துள்ளார். கள சூழல் என்பது மிக முக்கியம். அதற்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது என்பதும் மிக முக்கியம். ஆனால் இதை பற்றி அனைவரும் மறந்துவிட்டு ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசி வருகின்றனர் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: csk vs pbks: ‘அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது’ – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?
மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்!