நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போடியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கம் முதலே சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ரஷித் 11, ஆயூஸ் மாத்ரே 7, ஜடேஜா 17, துபே 6, தோனி 11, ட்தீபக் ஹூடா 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வந்தனர். ஆனால் மறுபக்கம் சாம் கரண் தொடர்ந்து களத்தில் நிலைத்து, 47 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக சென்னை அணியால் 190 ரன்கள் எடுக்க முடிந்தது.
பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக, சஹால் 4 விக்கெட்களையும், அர்ஷதீப் மற்றும் மார்கோ யான்சன் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர். தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் வழக்கம்போல நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதை நீண்ட நேரம் அவர்களால் செய்ய முடியவில்லை. பிரியான்ஸ் ஆர்யா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பிரப்சிம்ரனுடன் கைக்கோர்த்து ரன்களை குவித்தார். அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் ஒருக்கட்டத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வதேரா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடியால் போட்டியை முடித்து வைத்தார். அவர் 72 ரன்கள் அடித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், இந்த போட்டியை சிஎஸ்கே அணி தோற்றதால், தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
மேலும் படிங்க: ‘ஏதோ 200 ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்க மாதிரி பேசுறீங்க’.. மஞ்சுரேக்கரை விளாசிய கோலி சகோதரர்!
மேலும் படிங்க: csk vs pbks: ‘அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது’ – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?