மே 1- ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் மாற்றம்

திருப்பதி, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு வரும் மே 1-ந் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தெறிக்கப்பட்டுள்ளது. எனவே நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது. இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1-ந்தேதி முதல் … Read more

ஐ.பி.எல்.: டெல்லிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் … Read more

நைஜீரியா: கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் … Read more

நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சிதம்பரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறோம். நெல்லை வழக்கறிஞர் சங்கத்துக்கு 2025- 2026 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஏப்.30) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் வாக்குகளை சரிபார்க்க குழு அமைக்க வேண்டும். அவ்வாறு எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. … Read more

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் … Read more

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில்,  முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நாளை கேபினட் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை … Read more

அணு ஆயுதம் கொண்டு பாகிஸ்தான் தாக்கினால்… பரூக் அப்துல்லா பதில்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதல்

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 … Read more

அமெரிக்கா: மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை

வாஷிங்டன், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த … Read more

‘கடன் வசூல் ஒழுங்கு’ மசோதா – தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றம் 

சென்னை: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் விவரம்: பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகு கடைகள் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் … Read more