பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: இந்திய உளவுத் துறை, என்ஐஏ தகவல்

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா தாக்குதலை தலைமையேற்று நடத்தியுள்ளார் என்று இந்திய உளவுத் துறை, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவத்தில் எஸ்எஸ்ஜி என்ற சிறப்பு கமாண்டோ பிரிவு செயல்படுகிறது. … Read more

'மனதை உருக்கிய ஒரு படமாக இருந்தது'- `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய தமிழ் குமரன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,  நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிறப்பு காட்சியில் படத்தைப் பார்த்த  லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழ் குமரன்  `டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவைப் பாராட்டி … Read more

கர்நாடகா: உள்ளூர் கிரிக்கெட்டின்போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஆட்டத்தின்போது மதியம் 3 மணியளவில் ஒரு நபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டயானா ஷ்னைடரும் கைப்பற்றினர். தொடர்ந்து வெற்றியாளரை … Read more

சீனா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 22 பேர் பலி

பீஜிங், சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டலில் தீ பற்றியது. இந்த சம்பவத்தில் ஓட்டலில் இருந்த 22 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ … Read more

DC vs KKR: 4 in 1-ஆக மாயம் செய்த நரைன்; டெல்லியின் வெற்றியைப் பறித்த அந்த ஒரு மொமென்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன. கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை ஆகியவை ஒவ்வொரு ஆட்டத்தையும் வாழ்வா சாவா என ஆடும் நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு போட்டியாகத்தான், டெல்லியை அதன் சொந்த மைதானத்தில் இன்று (ஏப்ரல் 29) எதிர்கொண்டது கொல்கத்தா. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், இந்த சீசனில் பெரும்பாலான கேப்டன்கள் … Read more

கலைஞர் பல்கலைக்கழக மசோதா உட்பட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் என்னென்ன?

சட்டப்பேரவையில் நேற்று, தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு உரிமம் வழங்கும் முறையை எளிதாக்கி, ஆன்லைனில் வழங்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, … Read more

நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ பயன்படுத்தலாம்: பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் புலனாய்வு நிறுவனமான என்எஸ்ஓ-வின் ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு புகார் எழுந்தது. சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியின் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கள் செல்போன்களை … Read more

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா – கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் … Read more

"எனக்கு Video Games பிடிக்கும்; இப்ப Red Dead Redemption; அடுத்து…" – பட்டியல் போடும் பூஜா ஹெக்டே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தில், பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாரயணின் இசையமைத்திருக்கிறார். ‘RETRO’ டைட்டில் டீஸர் வெளியாகி காதல், ஆக்‌ஷன் மோடில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. Retro Exclusive Stills RETRO: `ஒரு தீயில சொல்லெடுத்து…’ – சூர்யாவின் ரெட்ரோ பட ‘THE ONE’ பாடல் ரிலீஸ் இத்திரைப்படம் மே … Read more