மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லா நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம்
திருப்பூர் மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. நேற்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநானதன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.