திமுக கருப்பு பேட்ஜ் முதல் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷம் வரை – பேரவையில் நடந்தது என்ன?

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த திமுக எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். நாடாளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்க வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இவர்களுடன் முதல்வர் … Read more

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வழக்கு: ரூ.168 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

மகாராஷ்டிராவில் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.168 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் (இஓடபிள்யூ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.167.85 கோடி மதிப்பிலான 21 சொத்துகளை பறிமுதல் செய்யவதற்கான அனுமதியை போலீஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் … Read more

ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு : நிதின் கட்காரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இன்றய கேள்வி நேரத்தில் மக்களவையில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாதது பல விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணம். … Read more

காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை மற்றும் பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று 110- விதியின் கீழ் அவர் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்த அரசு விரும்புகிறது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ். ‘இழப்பதற்கென்று எதுவுமில்லை – பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது’ … Read more

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா: முஸ்லிம் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோ​தா மக்​களவை​யில் நேற்​று​முன்​தினம் நிறைவேறியது. இதுகுறித்து அகில இந்​திய முஸ்​லிம் தனிச்​சட்ட வாரி​யம் கூறும்​போது, “மசோ​தா​வின் புதிய விதி​களின்​படி, முஸ்​லிம்​களுக்கு நன்​மையை விட தீமை​கள் அதி​கம். மசோ​தாவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுப்​போம்” என்று கூறி​யுள்​ளது. வாரி​யத்​தின் மூத்த நிர்​வாக உறுப்​பினர் மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹலி கூறுகை​யில், “தனிச்​சட்ட வாரி​யம் உள்​ளிட்ட பல முஸ்​லிம் அமைப்​பு​கள் இந்த மசோதா குறித்த தங்​கள் குறை​களை நாடாளு​மன்ற கூட்டு குழு​விடம் … Read more

மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க டி ஆர் பாலு வலியுறுத்தல்

டெல்லி மத்திய அரசு கச்சத்த்தீவை மீட்க வேண்டும் என டி ஆர் பாலு மக்கலவையில் வலியுற்த்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இ கச்சத்தீவு விவகாரம் குறித்து மக்களவையில் இன்று திமுக எம்.பி. … Read more

Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா? – MCA-வின் விளக்கம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இந்தச் சூழலில், ரஞ்சியில் மும்பை அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் மும்பை அணியை விட்டு வெளியேறுவதாகவும், கோவா அணிக்கு விளையாட விரும்புவதாகவும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு (MCA) நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை கிரிக்கெட் சங்கம், ஜெய்ஸ்வாலின் விருப்பத்துக்குச் சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம், 2025-26 ரஞ்சி சீசனில் கோவா அணிக்கு ஜெய்ஸ்வால் விளையாடவிருக்கிறார். கோவா அணிக்கு அவர் கேப்டனாகக் கூட நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் … Read more

“ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு

மதுரை: “மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு கருத்தரங்கில் கட்சியின் அகில இந்திய பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “இந்தியாவில் கூட்டாட்சி மீதும், மாநில உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுனர்களை தூண்டி விட்டு விளையாடுகின்றனர். பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களுக்கு பேரிடர் காலங்களில் நிவாரண நிதி … Read more

“முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்துவிட்டோம்” – ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா

புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில், அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று … Read more