Electricity Bill Saving Tips: இந்தியா முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னுமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் நிவாரணம் வழங்க முடியானல் போகிறது, மேலும் மக்கள் இப்போது ஏர் கண்டிஷனர்களை (ஏசி) வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை காலத்தில் நீங்களும் புதிய ஏசி வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஆம் மின்சார கட்டணம் அதிகரிக்காமல் முழு நேரம் ஏசி இயக்கலாம். ஆனால், உங்கள் ஏசி ரிமோட்டில் ஒரு பட்டன் மறைந்திருக்கிறது அதை அழுத்தினால் மின்சாரக் கட்டணத்தை பெருமளவில் குறைக்கலாம். ஆம், பல ஏசி ரிமோட்டுகளில் எக்கோ மோட் அல்லது எனர்ஜி சேவிங் மோட் பட்டன் உள்ளது, இது உங்கள் மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஏசியின் எகோ மோட்:
இந்த பொத்தானை அழுத்தும்போது, குறைந்த மின்சாரம் பயன்படுத்தப்படும் வகையில், AC கம்ப்ரசர் மற்றும் விசிறியின் வேகத்தை சரிசெய்கிறது. இதை தேவைக்கேற்ப ஏசி கம்ப்ரசரை ஆன் மற்றும் ஆஃப் செய்து கொண்டே இருக்கும். முக்கியமாக இது அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப இயங்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும் போது இந்த மோட் அணைத்து, மின்சாரத்தை சேமிக்க உதவுகிறது.
Eco Mode என்ன செய்கிறது?
பொதுவாக, Eco Mode இல், ஏசி அறையை மெதுவாக குளிர்வித்து, வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் பராமரிக்க உதவுகிறது, இதற்கு நிலையான மின் நுகர்வு தேவையில்லை. அறை குளிர்ந்த சிறிது நேரத்தில் தானாக ஆஃப் ஆகி, உங்கள் மின்சாரக் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
டைமரை செட் செய்துக்கொள்ளவும்:
இது தவிர, ஏசியில் டைமர் செட்டிங் மின்சாரத்தைச் சேமிக்க ஒரு சிறந்த வழியாகும். பெரும்பாலும் மக்கள் ஏசியை ஆன் செய்து கொண்டே தூங்கிவிடுவார்கள், அறை வெப்பநிலை குளிச்சியாகிவிட்டாலும் கூட, இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். டைமரைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ஏசி தானாகவே அணைந்துவிடும்படி செட் செய்துக் கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் தூங்க ஒரு மணிநேரம் எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு டைமரை செட் செய்துக்கொள்ளலாம். இது இரவு முழுவதும் தேவையில்லாமல் ஏசி இயங்குவதைத் தடுக்கும் மற்றும் மின்சாரத்தைச் சேமிக்க உதவும்.