சென்னை: மாநில சுயாட்சியை மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர்களின் திலகம் மு.க.ஸ்டாலின் என கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு கல்வியாளர்கள் செங்கோல் பரிசளித்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் மூலம் அனுமதி வழங்கியது. இதனால், தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரே இருந்து வருகிறார். இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மீட்டுத்தந்த […]
