PBKS-க்கு பெரிய வெற்றி… LSG-க்கு இனி பிளே ஆப் வாய்ப்பே இல்லை?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரின் 54வது போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில், கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் 1 ரன்னில் தோற்றது. 

போட்டியின் டாஸை வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பஞ்சாப் சுதாரித்துக்கொண்டு நம்பர் 3இல் ஜோஷ் இங்கிலிஸை இறங்கியது. அவரும் அதிரடியாக விளையாடினார். அவர் மயங்க் யாதவ் ஓவரை பிரித்து மேய்ந்தார். அவர் 14 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்குடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷ்ரேயாஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா விரைவான 16 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். 

அடுத்து ஷஷாங்க் உடன் சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும் அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி என 91 ரன்களை அடித்திருந்தார். ஸ்டாய்னிஸ் கடைசி கட்டத்தில் 55 பந்துகளில் 15 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்தது. ஆகாஷ் சிஹ், திக்வேஷ் ரத்தி, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

237 ரன்களுடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஹர்ஷ்தீப் சிங்கின் அதிரடி பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் 0, மார்க்ரம் 13, நிக்கோலஸ் பூரன் 6 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நீண்ட நேரம் விளையாடிய ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மில்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோவின் ஆயுஷ் பதோனி – அப்துல் சமத் ஜோடி மிரட்டியது. 

இந்த ஜோடி 81 ரன்களை குவித்தது. அப்துல் சமத் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பதோனி போராடி 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் என 74 ரன்களை அடித்தார். கடைசியில் ஆவேஷ் கான் சற்று ரன் அளிக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது. லக்னோ 7வது இடத்தில் நீடிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.