டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்துகிறது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு விபத்துக்கு அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உண்டு. […]
