ஸ்ரீநகர் போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரில் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. எனவே இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் […]
