பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்தொடரில் கடைசியாக 58 வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்ற நிலையில் அத்தோடு அப்போட்டி பாதியில் கைவிடப்பட்டது. 

இப்போடியில் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதி விளையாடு வந்தது. பாதியில் போட்டி பாதி நிறுத்தப்பட்ட நிலையில் பலரும் இரு அணிகளுக்கு தல ஒரு புள்ளி வழங்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஐபிஎல் நிர்வாகம் இத்தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையேயான 58 வது லீக் ஆட்டம் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்குகிறதோ அப்போது மீண்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் அப்போட்டியை பாதியில் இருந்து அல்லாமல் முதல் பந்தில் இருந்தே தொடங்குவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. 

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவது சரியாக இருக்காது என்பதாலும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் தொடரை ஒரு வார காலத்திற்கு பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வார காலத்திற்குப் பிறகு ஐபிஎல் தொடரை எப்படி, எங்கு, எந்த தேதிகளில் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

பஞ்சாப் – டெல்லி போட்டி 

இப்போட்டியில் பஞ்சாப் அணியே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 10.1 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தது. இந்நிலையில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. ப்ரியான்ஸ் ஆர்யா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இச்சூழலில் போட்டியை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதே சரியாக இருக்கும் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் ஒரு வாரத்திற்கு பிறகு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குப் பிறகு இப்போட்டியை மீண்டும் தொடங்கும் போது அப்போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான் மீண்டும் விளையாடுவார்கள் என்று சொல்ல முடியாது. வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா? என்று கூற முடியாது. அவர்களுக்கு அச்சமயத்தில் வேறு தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் இருக்கலாம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு இப்போட்டியை மீண்டும் முதலில் இருந்து நடத்த பிசிசிஐ முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிங்க: ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.