Live Updates
-
13 May 2025 11:26 AM IST
சாகும் வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளோம்: அரசு தரப்பு
*பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 பேருக்கான தண்டனை விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
*பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சி அளித்தனர் எனவும் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் கூறியுள்ளார்.
-
13 May 2025 10:37 AM IST
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று அல்லது 15 ஆம் தேதிக்குள் ரிசல்ட் எப்படியும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது
-
13 May 2025 9:58 AM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 70,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,765 ரூபாய்க்கும் விற்பனை
-
13 May 2025 9:54 AM IST
போர் சூழல் காரணமாக எல்லையில் நீடித்த பதற்றம் நேற்று முதல் தணிந்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இன்று மக்கள் வழக்கம் போல பணிக்கு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
