அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது: தமிழ் நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றை களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவ தயாராக உள்ளேன்.
மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமெனில், நமக்கு பலமான தலைவர் தேவை. அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வு மக்களுக்கு வரும். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு நமக்கும், நமது நாட்டுக்கும் கிடைத்துள்ள பலமான நாயகனே காரணம்.
இதனை உலக நாடுகளும் உன்னிப்பாக பார்க்கிறது. சமூகம் பலமாக இருக்க நாம் அனைவரும் முதலில் ஒற்றுமையாக இருத்தல் மிக அவசியம். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பாதுகாப்புடன், மாநில வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையை கண்டனர்.
திராவிட பூமி பல சிறப்புகளை தாங்கி நிற்கும் பூமியாகும். எந்த மாநிலத்திற்காவது பலமான தலைவர் தேவையெனில், தேர்தலின் போது ஓட்டுகள் சிதறிவிட கூடாது. நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் கூட சிறந்த கூட்டணிகள் மூலமாகத்தான் கிடைக்கிறது என்பதை நான் பலமாக நம்புகிறேன். இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளர்.