இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்து அணியை சேர்ந்த 2 வீரர்களான ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. “ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளுக்கு வரமாட்டார்கள்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!
மற்ற நாட்டு வீரர்கள் பங்கேற்பு!
நியூசிலாந்து வீரர்கள் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா அணிக்கு திரும்ப உள்ளனர். அதே சமயம் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவால் பிரிவிஸ் அணிக்கு திரும்ப உள்ளார். அவர் இந்த ஆண்டு மாற்று வீரராக சென்னை அணியில் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் எல்லீஸ், ஸ்ரீலங்காவை சேர்ந்த மதீஸா பத்திரனா, ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நூர் அகமது ஆகியோர் அணியில் இணைய உள்ளனர். ஜேமி ஓவர்டன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரால் மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளில் சேர முடியவில்லை.
எப்படி இருந்தாலும் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. வரும் மே 20ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மே 25 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தங்களது கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பல வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திலேயே மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக மே 25ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் பைனல் போட்டிகள் தற்போது ஜூன் மூன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் சர்வதேச போட்டிகள் தொடங்க உள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் அதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டார்க் மட்டும் ஹெசல்வுட் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.
மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!