IPL Latest News : இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, ஐபிஎல் 2025 சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது போட்டி மே 17, அதாவது நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் சென்ற நிலையில் இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், சில வீரர்கள் காயம் மற்றும் சர்வதேச போட்டிகளின் காரணமாக ஐபிஎல் விளையாட வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் மிட்செல் ஜான்சன் ஐபிஎல்லுக்கு எதிராக விஷமத்தனமான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
மிட்செல் ஜான்சன் கூறியது என்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியா செல்ல வேண்டாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் மிட்செல் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார். வீரர்கள் பணத்தை விட வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடுவது உலகம் முழுவதும் கிரிக்கெட் பிளேயராக இருகுகம் எந்த வீரருக்கும் இருக்கும் ஒரு கனவு. அப்படி அவர்கள் ஐபிஎல் விளையாட வந்துவிட்டால் இந்தியவில் பாதுகாப்புடன் கூடிய ராஜமரியாதை கொடுக்கப்படுகிறது. இதனை அனுபவித்தவர் தான் மிட்செல் ஜான்சன். ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மிட்செல் ஜான்சன் கருதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஆஸ்திரேலிய பிளேயர்களுக்கு அறிவுறுத்தல்
‘தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியன்’ பத்திரிகையில் ஜான்சன் எழுதிய கட்டுரையில், ” ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வீரர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளித்துள்ளது. இதற்கு காரணம் ஐபிஎல் விளையாடாமல் இருப்பது ஏமாற்றத்தையோ அல்லது எதிர்கால தொழில்முறை மற்றும் நிதி விளைவுகளையோ கூட ஏற்படுத்தக்கூடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதியிருக்கலாம். ஆனால் பாதுகாப்பு முதலில் முக்கியம். தனிப்பட்ட முறையில், நான் இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால் இந்தியா செல்ல மாட்டேன். பணம் முக்கியமல்ல, வாழ்க்கையும் பாதுகாப்பும் மிக முக்கியமானவை.
ஆஸ்திரேலியாவின் முடிவு ஆச்சரியம்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு முடிவுகளை விட தென்னாப்பிரிக்கா ஐபிஎல் விஷயத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதைக் கண்டு ஜான்சன் வியப்புடன் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வீரர்கள் மே 27 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் காலக்கெடு விதித்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா இந்த விருப்பத்தை வீரர்களிடம் விட்டுள்ளதை இதற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
WTC இறுதிப் போட்டி
ஜான்சன் கூறுகையில், “ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது ஜூன் 3 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, லார்ட்ஸில் WTC இறுதிப் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும். கண்டிப்பாக இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்களின் தயாரிப்பில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை விட அதன் வீரர்களிடம் மிகவும் கடுமையான அணுகுமுறையை எடுத்து வருவதை பார்க்கும்போது ஆஸ்திரேலியா வாரியம் மீது அதிருப்தியை உண்டாக்குகிறது என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிங்க: இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும் படிங்க: இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?