போலாரி தளத்​தில் பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டது: முன்னாள் ஏர் மார்ஷல் ஒப்புதல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது போலாரி தளத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு விமானம் அழிக்​கப்​பட்​டதை பாகிஸ்​தானின் முன்​னாள் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் இருப்​பது தெரிய​வந்​ததையடுத்து அந்த நாட்​டின் மீது ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது. அதன் பின்​னர் புரிந்​துணர்வு அடிப்​படை​யில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தப்​பட்​டது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எந்​த​வித பாதிப்​பும் இல்லை என்று பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக கூறி வந்​தா​லும் செயற்​கைக்​கோள் எடுத்த படங்​கள் உண்மை நிலையை எடுத்​துக்​காட்​டு​வ​தாக இருந்​தன.

இந்த நிலை​யில், இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான போலாரி தளத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த வான்​வழி எச்​சரிக்கை மற்​றும் கட்​டுப்​பாட்டு அமைப்பு (ஏடபிள்​யூஏசிஎஸ்) விமானம் மே 9 மற்​றும் 10-ம் தேதி இரவு நடத்​தப்​பட்ட தாக்​குதலில் அழிக்​கப்​பட்​டதை ஓய்​வு​பெற்ற பாகிஸ்​தான் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் ஒப்​புக்​கொண்​டுள்​ளார்.

இதுகுறித்து பாகிஸ்​தான் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்​டி​யில், “அவர்​கள் (இந்​தி​யப் படைகள்) தொடர்ச்​சி​யாக நான்கு பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் அல்​லது வானிலிருந்து தரையை தாக்​கும் ஏவு​கணை​களை ஏவி​னார்​கள். அப்​போது பாகிஸ்​தான் விமானிகள் தங்​கள் விமானத்​தைப் பாது​காக்க விரைந்​தனர், ஆனால் ஏவு​கணை​கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்​தன, துர​திர்​ஷ்ட​வச​மாக, நான்​காவது ஏவு​கணை போலாரி விமானப்​படை தளத்​தில் உள்ள விமான கூரையை தாக்​கியது, அங்​கு​தான் எங்​கள் ஏடபிள்​யூஏசிஎஸ் விமானம் ஒன்று நிறுத்​திவைக்​கப்​பட்​டிருந்​தது. அது முற்​றி​லும் சேதமடைந்​தது’’ என்​றார்.

பாகிஸ்​தானை தாக்க வரும் கப்​பல்​கள், வாக​னங்​கள், ஏவு​கணை​கள் நீண்ட தூரத்​திலேயே கண்​டறிய ஏடபிள்​யூஏசிஎஸ் விமானங்​கள் பெரிதும் உதவு​கின்​றன. மேலும், கப்​பலிலும் தரை​யிலும் உள்ள அச்​சுறுத்​தலை அடை​யாளம் காண​வும், மதிப்​பிட​வும், நடவடிக்கை எடுக்​க​வும் நீண்ட தூர ரேடார் கண்​காணிப்பு மற்​றும்​ வான்​வெளி கட்​டுப்​பாடு வி​மானம்​ உதவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.