பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்ததால், மே 8 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் மே 17 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும் என அறிவித்து அட்டவனையும் வெளியிடப்பட்டது. அதன்படி மீண்டும் தொடங்கும் ஐபிஎல்லில் முதல் போட்டியாக பெங்களூருவில் இன்று (மே 17) ஆர்சிபி – கேகேஆர் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். ஆனால் மழையால் டாஸ் வீசப்படவில்லை. இந்த கனமழையானது இரவு 9 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் போட்டி ரத்தாகலாம். அப்படி ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இது கொல்கத்தா அணிக்கு பின்னடவை எற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை போட்டி நடைபெற்று அதில் ஆவர்கள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும். 

மறுபுறம் ஆர்சிபி அணிக்கு இது குறித்தான கவலை ஏதும் இல்லை. அவர்கள் மூன்று போட்டியில் ஏதேனும் ஒன்றில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள். அவர்கள் தற்போது 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இப்போடி ரத்தாகும் பட்சத்தில் 1 புள்ளி பெற்று 17 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறுவார்கள். 

மேலும் படிங்க: ஐபிஎல்லில் மிகவும் மந்தமாக விளையாடிய 5 வீரர்கள்!

மேலும் படிங்க: இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.